'கேம் சேஞ்சர்' இசையமைப்பாளரை Unfollow செய்த நடிகர் ராம் சரண்...!

'கேம் சேஞ்சர்' இசையமைப்பாளர் தமன்-ஐ நடிகர் ராம் சரண் Unfollow செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "கேம் சேஞ்சர்". இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மேலும், வசூலும் தோல்வியடைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர், தமன் பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கும் இசையமைத்து வரும் நிலையில் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கும் இசையமைத்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நான் கம்போஸ் செய்த பாடல்கள் நன்றாக இருந்தன. ஆனால், ஹிட்டாகவில்லை. காரணம், நல்ல நடன அசைவுகளும் ஹூக் ஸ்டெப்ஸ்களும் இல்லாததே" என்று தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு இசையமைப்பாளர் தமன் மீது படக்குழுவினர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது சமூக வலைதள கணக்கை ராம் சரண் Unfollow செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.