ஆர்ஜே பாலாஜியின் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்... எகிறும் எதிர்பார்ப்பு !

நடிகர் ஆர் ஜே பாலாஜியின் புதிய படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முக திறமைக் கொண்டவர் ஆர்ஜே பாலாஜி. ஆர்ஜேவாக இருந்த அவர், தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து தற்போது 'சிங்கப்பூர் சலூன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது ஆர்ஜே பாலாஜி நடிப்பில் 'சொர்க்கவாசல்' என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கருணாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். பீஸ்ட், பகாசூரன் ஆகிய படங்களுக்கு பிறகு செல்வராகவனுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.