சட்ட விரோதமாக கிளி வளர்ப்பு... நடிகர் ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம் !

robo Shankar

சட்ட விரோதமாக கிளி வளர்த்த வழக்கில் நடிகர் ரோபோ சங்கருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரோபோ சங்கர். விஜய் டிவியின் 'கலக்கப்போவது' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியால் பிரபலமான அவர், தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் அவர்,  செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 

robo Shankar

தனது வீட்டில் நாய், மீன்கள் என பல்வேறு வகையான செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். அந்த வகையில் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து வருகிறார். இது குறித்து வீடியோ ஒன்றும் யூடியூப்பில் வெளியானது. அலெக்சாண்டரியன் கிளி வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். அதனால் ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்ற வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அலெக்சாண்டரியன் கிளி வளர்ப்பதை அறிந்து அதை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர்.

robo Shankar

இது தொடர்பாக ரோபோ சங்கரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விசாரணையில் கிளி வளர்த்ததற்கு வருத்தம் தெரிவித்ததால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. அதற்கு பதிலாக ரூபாய் 2.5 லட்சம் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story