ஆண்டனி தாஸாக மிரட்டும் சஞ்சய் தத்... பிறந்தநாளையொட்டி வெளியான ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் !

leo

நடிகர் சஞ்சய் தத்  பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை ‘லியோ’ படக்குழு வெளியிட்டுள்ளது. 

விஜய்யின் அசத்தலான நடிப்பில் உருவாகி வருகிறது ‘லியோ’. லோகேஷ் கனகராஜின் மிரட்டலான இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

leo

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிரூத் இப்படத்திற்கு பின்னணி இசையை அமைத்து வருகிறார்.  வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. 

leo

விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சஞ்சய் தத், ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவரின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story