STR49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் சந்தானம்...!

சிம்பு நடித்து வரும் STR49 படத்தில் நடிப்பதை நடிகர் சந்தானம் உறுதி செய்துள்ளார்.
சிம்பு அடுத்து நடிக்கும் STR49 படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
மேலும் STR49 படத்தின் நடிகர் சந்தானம் காமெடியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அண்மையில் ஒரு நேர்காணலில் சந்தானம் உறுதி செய்துள்ளார். அதில், சிலம்பரசன் என்னை இந்த படத்தில் நடிக்கச் சொன்னார். அவரிடம் முடியாது என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் எனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து நான் எப்போதும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், STR49 படத்தின் அதே நேரத்தில் நான் மற்றொரு படத்தை தொடங்க இருந்தது, ஆனால் நான் அந்த தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டு STR49 க்கு தேதிகளைக் கொடுத்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.