நடந்தே சென்று முருகனை தரிசனம் செய்த சந்தானம்.. பழனி மலையில் சிறப்பு வழிபாடு !

santhanam

3 கிலோமீட்டர் நடந்தே சென்று முருகனை நடிகர் சந்தானம் தரிசனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் மிகவும் பிரதிப்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று பழனியாண்டவர் முருகன் கோயில். மலை மீது குடிக்கொண்டிருக்கும் பழனி மலை முருகனுக்கு சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சமந்தா, கௌதம் கார்த்திக், மஞ்சிமா உள்ளிட்டோர் முருகனை தரிசித்தனர். 

santhanam

இந்நிலையில் நடிகர் சந்தானம் பழனி மலை முருகனை இன்று தரிசனம் செய்தார். முதலில் பழனி மலையின் கிரிவல பாதையான 3 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே வந்தார். அதன்பிறகு ரோப் கார் மூலம் பழனி அடிவாரத்திலிருந்து மேலே சென்ற அவர், முருகனை வழிப்பட்டார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 

santhanam

தற்போது சந்தானம் நடிப்பில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் உருவாகி வருகிறது. ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி சுற்று வட்டார பகுதியில் நடைபெற்று வருகிறது. அதனால் சிறிய இடைவெளி இருந்ததால் பழனி மலை முருகனை சந்தானம் தரிசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Share this story