வாய்ப்பு வந்தால் மீண்டும் காமெடியனாக நடிப்பேன் - நடிகர் சந்தானம் !

santhanam

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் காமெடியனாக நடிப்பேன் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். 

முன்னணி காமெடியான இருந்த நடிகர் சந்தானம், ஹீரோவாக கலக்கி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள அந்த படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள தற்போது ப்ரோமோ பணிகள் நடைபெற்று வருகிறது.

santhanam  

அந்த வகையில் கோவைக்கு வந்த நடிகர் சந்தானம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த படம் ஒரு வித்தியாசமான பேய் படம். திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியுள்ளதால் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். இந்த படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகமும் உருவாகி வெளியாகும். அடுத்ததாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகவுள்ளது. 

santhanam

கதாநாயகனாக நடித்து வரும் என்னை, நகைச்சுவை நடிகரா, கதாநாயகனா என கேட்டால் என்ன சொல்வது. அது எப்படி இருக்கிறது என்றால் இட்லி வேண்டுமா ? தோசை வேண்டுமா ? என்பது போல இருக்கிறது. காமெடியான இருந்தபோது எவ்வித கலையும் இல்லாமல் இருந்தேன். ஆனால் கதாநாயகனாக இருப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவேண்டும். மீண்டும் நல்ல கதை வந்தால் பெரிய நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், சொந்தமாக படங்களை தயாரிப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவேண்டும் என்பது எனது ஆசை. திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்ப்பது நல்லது என்று தெரிவித்தார். 


 

Share this story