நடிகர் சந்தோஷ் பிரதாப்பின் தாயார் மரணம்

santhosh

 
சார்பட்டா பரம்பரை, அரண்மனை-4 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சந்தோஷ் பிரதாப் . இவர் தற்போது, பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய தாய் இந்திரா பாய் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். santhosh

அவரது உடல் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைக்கப்பட்டது. இதில் உறவினர்கள், நண்பர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நடிகர் சந்தோஷ் பிரதாப், தனது தாயாருக்கு இறுதி காரியங்களைச் செய்வதற்கு ஊர்வலமாக தகன மின் மயானத்திற்கு வாகனம் மூலமாக உடலை கொண்டு சென்றார். இந்த காட்சி பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

Share this story