புதிய அவதாரம் எடுத்த சூப்பர் ஸ்டார் பட நடிகர்... புதிய தகவல் !
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சரண்ராஜ், இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

90-களில் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சரண்ராஜ். ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் நண்பராக நடித்து பிரபலமானார். அதன்பிறகு பணக்காரன், தர்மதுரை, பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர 9 மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு நடிகராக இருந்த சரண்ராஜ், தற்போது இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் தேவ் சரண்ராஜ் மற்றும் சுஷ்மிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை சோனி ஸ்ரீ புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பு தொடங்கி குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த படம் குறித்து புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

