திடீரென நடிகர் சரத்பாபுக்கு உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி !

sarath babu
முன்னணி நடிகர் சரத்பாபு திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

80-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றார். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

sarath babu

7 வயதாகும் அவர் ஆந்திரம் மாநிலத்தை சேர்ந்தவர். வயது முதிர்வு காரணமாக ஐதராபாத்தில் உள்ள வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் நடிகர் சரத்குமார் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

 

 

Share this story