'சூர்யவம்சம்' 2ம் பாகம் - நடிகர் சரத்குமார் கொடுத்த சுவாரஸ்ய தகவல்

சரத்குமார்

இயக்குனர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா , நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கும்  ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.

150 வயதானாலும் 'சூர்யவம்சம் 2' படத்தில் நடிப்பேன் - சரத்குமார்

இந்த விழாவில் இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமார், பார்த்திபன் நடிகர் சந்தான பாரதி, நடிகர்கள் ஜெயம் ரவி,ஜீவா, இயக்குனர்கள் பாக்கியராஜ்,எழில்,பேரரசு, தேசிங்கு பெரியசாமி, சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், பார்த்திபன்,மிஷ்கின்,வாசு,ஆர் பி உதயக்குமார் நடிகர்கள் ரமேஷ் கண்ணா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். படத்தின் டிரைலர் காட்சி வெளியிடப்பட்டு அதன் பின்பு இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், “இந்த இடம் ஒரு ஏக்கமான விழா என்று சொல்லலாம். முன்னாள் முதல்வர் கலைஞர் முன்னிலையில் அவர்கள் 175 ஆவது நாள் பட விழாவை இங்கு கொண்டாடினோம். இப்போது ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் உடற்பயிற்சி செய்வதால் தான். சூர்யவம்சம் 2 பாகம் எடுப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். எனக்கு 150 வயது ஆனாலும் நடிப்பேன்” என்றார்.

Share this story