‘விடுதலை படம் என் வாழ்கைக்கு புத்துயிர் கொடுத்துள்ளது’ - கன்னட நடிகர் சத்யா நெகிழ்ச்சி.

photo

விடுதலை படத்தில் பணியாற்றிய அனுபவம் மற்றும் படத்தில் நடித்த பிறகு தனது வாழ்கையில் என்னமாதிரியான மாற்றங்கள் நடந்துள்ளது என்பது குறித்து நெகிழ்ச்சியாக பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் எச். சத்தியா.

photo

சூரி கதையின் நாயகனாக நடித்து விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் விடுதலை பாகம் ஒன்று. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படம் தமிழ்நாடு கடந்து மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தில் ஆயுதப்படை கான்ஸ்டபிள்களுள் ஒருவராக நடித்துள்ள சர்தார் சத்தியா என்கிற எஸ். சத்தியா விடுதலை படம் குறித்தும், வெற்றிமாறம் குறித்தும் பகிர்ந்துள்ளதாவது, “ 2007ஆம் ஆண்டு முதல் கன்னடத்தின் மூலமாக சினிமாதுறைக்கு வந்தாலும் விடுதலை படத்தில் நடித்த போது  நான் கற்றுகொண்டது ஏராளம், அதுவும் இயக்குநர் வெற்றிமாறனிடமிருந்து தினமும் புது புது விஷயங்களை கற்றுகொண்டேன்.  நடிப்பு என்றால் என்ன என்பதை நான் உணர்ந்ததே விடுதலை படத்திற்கு பிறகுதான், இந்த படத்திற்கு பிறகு பல படவாய்ப்புகள் என்னை தேடி வருகிறது. மிகவும்  மகிழ்ச்சியாக இருக்கிறது” என தனது அனுபவத்தை பகிந்துள்ளார்.

Share this story