சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைத்த சசிகுமார்.. பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு !

sasikumar

நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. 

இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் சசிகுமார். முதலில் தனது அழகான படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு நடிகராக மாறி தற்போது அனைவரின் வரவேற்பையும் பெற்று வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. 

sasikumar

இதையடுத்து தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக சசிகுமார் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிகர் நவீன் சந்திரா மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் நவீன் ஏற்கனவே தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் வில்லனாக நடித்தவர். இதுதவிர சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 

இந்த படத்தை ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ரஞ்சித் மணிகண்டன் இயக்குகிறார். பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த படப்பூஜையில் தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குனர் கஸ்லூரி ராஜா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

 


 

Share this story