புத்தாண்டில் புது கிளிக்ஸ் - ‘கேப்டன் விஜயகாந்’தை சந்தித்த ‘நடிகர் சத்தியராஜ்’.

photo

சினிமாவில் ‘கேப்டன் விஜய்காந்த’ என்ற மாமனிதரை தவிர்க்க முடியாது. இவர் படங்களில் மட்டும் மக்களுக்காக போரடவில்லை, நிஜ வாழ்க்கையில் இவர் செய்த செயல்கள் ஏராளம். அதனாலேயே மக்கள் இவரை  எதிர்கட்சி சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தனர். தமிழக அரசியலில் கேம் சேஞ்சராக இருந்த கேப்டன், கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறார்.

photo

அந்த வகையில் இவரது உடல்நலம் மற்றும் தே.மு.தி.க கட்சி இரண்டையும் கேப்டனின் மனைவியான பிரேமலதா விஜய்காந்த தான் கவனித்து வருகிறார். அதன்படி விசேஷ நாட்களில் மட்டும் மக்களை சந்தித்து வரும் கேப்டன் இன்றும் கூட புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைத்து சந்தித்து ரசிகர்களுக்கு கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

photo

அதன் தொடர்ச்சியாக நடிகரான சத்தியராஜ் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை போர்த்தி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதாற்கான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Share this story