நடிகர் சத்யராஜின் தாயார் மரணம்... பிரபலங்கள் இரங்கல் !

sathyaraj

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் சுப்பையா வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். 

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக இருப்பவர் நடிகர் சத்யராஜ். 80, 90-களில் ஹீரோ மற்றும் வில்லனாக கலக்கி வந்த அவர், தற்போது குணசித்திர வேடங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது நடிப்புக்கு இன்றைக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இருந்து வருகிறது. தமிழை தவிர தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் நடித்து வருகிறார். 

sathyaraj

நடிகர் சத்யராஜ் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வரும் நிலையில் அவரது தாயார் நாதாம்பாள் அவரது சொந்த ஊரான கோவையில் வசித்து வருகிறார். இதற்கிடையே 94 வயதாகும் சத்யராஜின் தாயார் நாதாம்பாள், வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில் நாதாம்பாள் இன்று மாலை 4 மணிக்கு வயது முதிர்வால் காலமானார். ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சத்யராஜ், தனது தாயாரின் மறைவை அறிந்து உடனடியாக கோவை விரைந்தார். நாதாம்பாள் இறுதிச்சடங்குகள் கோவை அருகே உள்ள சொந்த ஊரில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுப்பையா - நாதாம்பாள் தம்பதிக்கு சத்யராஜ் ஒரே மகனாவார். இதுதவிர கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story