‘பருத்திவீரன்’ நடிகர் ‘செவ்வாழை ராசு’ காலமானார்.

photo

நடிகரும் தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரரான செவ்வாழை ராசு உடல்நல குறைவால் மருத்துவமனையில் காலமானார்.

photo

அமீர்- கார்த்தி கூட்டணியில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹீட்டான திரைப்படம் ‘பருத்திவீரன்’ இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காதாப்பாத்திரமும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது. அதற்கு காராணம் அழுத்தமான கதை, இயல்பான நடிப்பு, கச்சிதமான வசனம் என படத்தை பற்றி கூறிகொண்டே போகலாம். பருத்திவீரன் படத்தில் நடித்த பலருக்கு இப்படம் அடையாளமாக மாறியது. அந்த வகையில் இந்த படத்தில் பொணந்தின்னியாக நடித்து பிரபலானவர் செவ்வாழை ரசு  இவர் மைனா, கந்தசாமி, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்  இவர் இன்று உடல்நல குறைவால் காலமானார்.

ராசு இன்று அதிகாலை காலமானார், இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு  தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியில் அமைந்துள்ள கோரையூத்து கிராமத்தில் இறுதிசடங்குகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து வரும் சினிமாத்துறையினரின் மரணம் வேதனை அளிப்பதாக உள்ளதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Share this story