தொரட்டி படத்தின் கதாநாயகன் கொரோனாவால் உயிரிழப்பு!
Thu Jun 17 2021 4:39:28 AM

தொரட்டி படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை மிகவும் பாதித்து வருகிறது. தமிழ் சினிமாவிலும் பல திறமையான கலைஞர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தொரட்டி படத்தில் கதாநாயகனை நடித்த ஷமன் மித்ரு கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து இன்று உயிரிழந்துள்ளார். ஷமன் மித்ரு தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. கேவி ஆனந்த், ரவிகே சந்திரன் ஆகியோரிடம் அவர் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.
ஷமன் மித்ரு மறைவை அடுத்து கோலிவுட் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.