யம்மா யம்மா காதல் பொன்னம்மா....-காதல் நிரம்பி வழிய ‘ஸ்ருதிஹாசன்’ வெளியிட்ட வீடியோ.

photo

ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் நெருக்கமாக  இருந்து  வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

கமல் ஹாசனை போலவே பன்முக திறமை கொண்டவராக சினிமாதுறையில் வலம் வருபவர் ஸ்ருதிஹாசன்.  இவர் சினிமா உலகிற்கு ‘தேவர் மகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கமல் ஹாசன் நடித்த ‘உன்னைபோல் ஒருவன்’ படத்தில் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.  தொடர்ந்து சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களின் இதயங்களை வென்றார், அடுத்தடுத்து விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

photo

இவர் தமிழை கடந்து, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து அசத்தினார்.அந்த வகையில்  கடந்த பொங்களுக்கு தெலுங்கில் நடிகர் பாலையாவுக்கு ஜோடியாக நடித்த வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த வாடல்ட்டர் வீரய்யா ஆகிய படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ்ஸிற்கு ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடித்து வருகிரார். இந்நிலையில் தன்னுடைய காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ருதிஹாசன் சாந்தனுவுக்கு முத்தம் கொடுக்க, பதிலுக்கு சாந்தனுவும் ஸ்ருதிக்கு முத்தம் கொடுக்கிறார்.  காதல் பொங்கி வழிய இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 

Share this story