மாஸ்..கிளாஸ் லுக்கில் சிம்பு... சரவெடியாய் வெடிக்கப்போகும் ‘STR 48’ !

simbu

நடிகர் சிம்பு புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

‘மாநாடு’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சிம்பு, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துவிட்டார். அதனால் சிம்புவின் அடுத்த படம் எப்படி இருக்கும் என காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். சிம்புவின் 48வது படமாக உருவாகும் இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. 

simbu

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்திற்கான ப்ரீ பிரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. வரலாற்று பின்னணி கொண்டு உருவாகும் இந்த படத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

simbu

இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்பு, மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை கற்க லண்டனுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே நீண்ட தலைமுடியுடன் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை சிம்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் சிம்புவின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மாஸ் கிளாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

 

Share this story