திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் சிலம்பரசன்... வீடியோ வைரல்... !

'தக் லைஃப்' ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து நடிகர் சிலம்பரசன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ’தக் லைப்’ திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. அதில் கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் வைராலானது.
#SilambarasanTR About Marriage..💥
— Laxmi Kanth (@iammoviebuff007) April 22, 2025
"Marriage is not a Problem.. It's the Person.. When the Time Comes, The right companion will come.. Then the things will be fine.."pic.twitter.com/t2unkTIY9N
சமீபத்தில் நடந்த ப்ரோமோஷனுக்கான நேர்காணலில் படக்குழு கலந்துக் கொண்டனர் அதில் நடிகர் சிலம்பரசன் திருமணத்தை பற்றி அவருடைய கருத்தை கூறியுள்ளார் " திருமணம் இங்கு பிரச்சனை இல்லை. பிரச்சனை இங்கு யாரை நாம் திருமணம் செய்கிறோம் என்பது தான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நம்மிடம் குறைந்துக் கொண்டே வருகிறது. நீ இல்லன்னா இன்னொருத்தன், நீ இல்லன்னா இன்னொருத்தி... இது என்ன மனப்பான்மை. நீ இல்லன்னா இன்னொருத்தி வந்துகிட்டே தான் இருப்பா அதுக்காக அவங்க கூடலாம் போயிட முடியாதுல.. நமக்கான நேரம் வரும் போது நமக்கான ஒருவர் கண்டிப்பாக வருவார் அப்போது எல்லாம் நடக்கும்" என கூறியுள்ளார்.