பிரம்மாண்டமாக உருவாகிறது சிம்புவின் 50வது படம்.. இயக்குனர் இவரா ?

simbu

சிம்புவின் 50வது திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் சிம்பு. சில ஆண்டு சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன. 

simbu

இந்த படங்களுக்கு பிறகு 'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ளார்.இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு சிம்பு தனது 49வது படத்தில் நடிப்பார். இந்நிலையில் சிம்புவின் 50வது திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது சுதா கொங்கரா ஆகிய இருவரில் ஒருவர் இயக்குவர் என்று தகவல் கசிந்துள்ளது. 

Share this story