சந்தானம் நடித்துள்ள DD Next Level படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிம்பு...!

simbu

சந்தானம் நடித்துள்ள DD Next Level படக்குழுவிற்கு நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது. முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கீத்திகா திவாரி, யாஷிகா, கஸ்தூரி,பிரமாஜி, நிழல்கள் ரவி, ஷா ரா, லொல்லு சபா மாறன், ராஜேந்திரன், லொல்லு சபா ஜீவா மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான‘ தி பீபுல் ஷோ’ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. இதனை பகிர்ந்த நடிகர் சிம்பு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அந்த பதிவில், பிரமாண்டமான டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குகுழுவிற்கு வாழ்த்துக்கள், மிகவும் வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது,  உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் மேலும், பெரிய திரையில் அதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

  

Share this story