பிரம்மாண்டமான வரலாற்று பின்னணி படத்தில் சிம்பு... விரைவில் தொடங்கும் ஷூட்டிங் !

simbu

கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.  இந்த படத்தை‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.

simbu

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கான லோகேஷன் முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது படத்தை தொடங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. 

இந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஐந்து மொழியில் பான் இந்தியா திரைப்படமாக ஏற்படும் உருவாக உள்ளது.‌ அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து உள்ளது. 

 

Share this story