வள்ளலார் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு தியானம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் இன்று காலை வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த படத்தின் பெயர் வெளியாகும் அதே நேரத்தில் நடிகர் சிலம்பரசன் வடலூர் சத்தியஞான சபையில் தியானம் மேற்கொண்டார்.

சத்தியஞான சபைக்கு வருகை தந்த அவர் வள்ளலாரை வழிபட்டு தியானம் மேற்கொண்ட பிறகு சத்திய ஞான சபையில் அமைந்துள்ள தர்ம சாலை வள்ளலார் ஏற்றிவைத்த அணையா அடுப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். தயாரிப்பு நிறுவனம் அந்த படத்திற்கு அரசன் என பெயரிட்ட நிலையில் அங்கு இருந்தவர்களிடம் ஏழை, எளிய, ஆதரவற்றார்கள் பசியை போக்கி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் வள்ளலாரை போல தானும் குழந்தைகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று வேண்டி கொண்டேன், அதனால் தான் வள்ளலார் அழைத்த உடன் வடலூர் சத்திய ஞான சபைக்கு வருகை தந்து வள்ளலார் சுவாமிகளை தரிசனம் செய்தேன் என்று கூறினார்.

