‘மன்மதன்’ கெட்டப்பிற்கு மாறிய சிம்பு... இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம் !

simbu

நடிகர் சிம்பு புதிய தோற்றத்திற்கு மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் சிம்பு. தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள அவர், மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார். இதையடுத்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

simbu

‘பத்து தல’ படத்திற்கு பிறகு கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். சிம்புவின் 48வது படமாக உருவாகும் இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தேசிங்கு பெரியசாமி  இயக்கவுள்ளார். சுமார் 100 கோடியில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 simbu

இந்நிலையில் நடிகர் சிம்பு புதிய தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. கடந்த மாதம் தாய்லாந்து சென்றிருந்த சிம்பு, தற்போது சென்னை ​திரும்பியுள்ளார். இதையொட்டி அவரின் புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ‘மன்மதன்’ படத்தின் தோற்றத்தில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Share this story