சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிம்பு.. பிறந்தநாளில் வெளியாகும் சர்ப்ரைஸ் !

simbu

சிம்புவின் அடுத்த படத்தை சூப்பர் ஹிட் இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். முன்பை விட தற்போது வேகமாக படங்களை முடித்து வருகிறார். அதனால் சிம்பு நடிக்கும் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கடைசியாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து வந்த சிம்பு, சமீபத்தில் அந்த படத்தை முடித்தார்.

simbu

இந்த படத்தை அடுத்து சிம்பு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் சுதா கொங்கரா, ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில் சிம்புவின் 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேல்ஸ் அல்லது ஏஜிஎஸ் ஆகிய இரு நிறுவனங்களில் ஒன்று இப்படத்தை தயாரிக்கவுள்ளதாம். சிம்புவின் பிறந்தநாளையொட்டி இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

simbu

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான  'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருந்தார். இந்த படத்தில் இன்னோரு ஜோடியாக விஜே ரக்‌ஷனும், நிரஞ்சனியும் நடித்திருந்தனர்.இவர்களுடன் இயக்குநர் கெளதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story