'பத்து தல' டப்பிங் தொடங்கும் சிம்பு... விரைவில் புதிய பட அறிவிப்பு !

நடிகர் சிம்புவின் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'ஈஸ்வரன்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார். அதனால் அவர் நடிக்கும் அடுத்த படமான 'பத்து தல' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிம்பு ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தை 'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சிம்பு, வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றார். அங்கு சில நாட்கள் ஒய்வெடுத்த வந்த அவர் இன்று சென்னை திரும்பினார். இந்நிலையில் 'பத்து தல' படத்தின் டப்பிங்கை முடிக்கும் சிம்பு, அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.