“காட்டு பசியில தீனி போடும் கதை வேணும்”.. மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறாரா சிம்பு ?

simbu

இனி நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புகென்று எப்போதும் மாஸாக ஓபனிங் இருந்து வருகிறார். அதனால் தான் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய போதும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்துள்ள அவர், தற்போது ‘பத்து தல’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரின் ஏஜிஆர் கதாபாத்திரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

simbu

இந்த படத்தையடுத்து சிம்புவின் இயக்குனர் யாராக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதேநேரம் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க படத்திலும் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ட்விட்டரில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. 

அதில் நான் காட்சி பசியில் இருக்கிறேன். அதனால் அடுத்த படங்களின் கதைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறேன். அதிக கதைகள் குவிந்து வருகிறது. ஒரு காலத்துல எனக்கு இருந்த காட்டு பசில உருவானது தான் ‘மன்மதன்’ திரைப்படம். அதுபோன்று நானே ஒரு படத்தை இயக்கவோ அல்லது நல்ல கதையை சொல்லுகிற இயக்குனரை வைத்தோ ஒரு நல்ல படம் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். 

அந்த வீடியோவோடு  ‘Patience is a virtue. It took a lot of faith but it’s worth the wait’ என கூறி #STR48 என்று பதிவிட்டுள்ளார். சிம்புவின் இந்த வீடியோ ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

Share this story