லண்டன் பறந்த சிம்பு... ‘STR 48‘ படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா ?

simbu

கமல்ஹாசன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். சிம்புவின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

simbu

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக எழுதிய அந்த கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சிம்பு நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ப்ளாஷ் காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என கூறப்படுகிறது. முழுக்க முழுக்க இந்த படம் ஆக்ஷனில் தெறிக்கவிடும் என கூறப்படுகிறது. 

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இதற்காக சில தற்காப்பு கலைகளை கற்க நடிகர் சிம்பு லண்டன் சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் இருக்கும் சிம்பு பயிற்சிகளை முடித்துவிட்டு விரைவில் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. 

 

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. தற்போது இந்த படத்திற்கான லோகேஷன் பார்க்கும் பணியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஈடுபட்டுள்ளார். பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஐந்து மொழியில் பான் இந்தியா திரைப்படமாக ஏற்படும் உருவாக உள்ளது.‌ 

இந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தீபிகாவை சந்தித்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி படத்தின் கதையை கூறியதாக தெரிகிறது. கதை பிடித்திருப்பதாலும், சிம்பு படம் என்பதால் அவர் விரைவில் இந்த படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் தீபிகா, ரஜினியுடன் ‘கோச்சுடையான்’, ஷாருக்கானுடன் மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story