இலங்கை தொழிலதிபர் பெண்ணுடன் திருமணமா ?... உண்மையை சொன்ன சிம்பு தரப்பு !

simbu

இலங்கை தொழிலதிபர் பெண்ணுடன் திருமணம் என்று வெளியான தகவலுக்கு சிம்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 

தனது அப்பா டி.ராஜேந்திரன் இயக்கத்தில் கைகுழந்தையாக நடிக்க ஆரம்பித்தவர் சிம்பு. இதையடுத்து படிபடியாக வளர்ந்து தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ளார். அவரின் அசுர வளர்ச்சி திரையுலகில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போதும் இளமை மாறாமல் துடிப்புடன் நடித்து வருகிறார். 

simbu

சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை நடிகர் சிம்பு உற்சாகமாக கொண்டாடினார். 40 வயது கடந்துவிட்டதால் சிம்புக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்தது. இதையடுத்து இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் மகளை சிம்பு கரம்பிடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இவர்களுக்கு ரகசியமாக நிச்சயம் நடைபெற்ற கூறப்பட்டது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் சிம்புக்கு திருமணம் என்ற செய்தி அடிக்கடி வெளியாவதும், பின்னர் அது வதந்தி என்று கூறுவதும் வழக்கமாகிவிட்டது. அதனால் இந்த முறையாவது உண்மையா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எப்போதும் போல சிம்புவின் திருமணம் வதந்தி, வெறும் வதந்தியே என அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story