நடிகர் சிம்பு சகோதரருக்கு குழந்தை பிறந்தது... ரசிகர்கள் வாழ்த்து...
1705938428955
தமிழ் சினிமாவில் செம்ம ஸ்டைலிஷ்ஷான நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், ‘மாநாடு’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படம் வெற்றிப்பெற ‘வெந்து தணிந்தது காடு‘, ‘பத்து தல’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு சிம்புவின் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

இந்நிலையில், சிம்புவின் தம்பி குறளரசனுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

