சினிமாவில் அறிமுகமான நடிகர் சிவாஜி கணேசனின் மற்றோரு பேரன்...!

dharshan

நடிகர் சிவாஜி கணேசனின் மற்றோரு பேரன் தர்ஷன் சினிமாவில் அறிமுகமாகிறார். 

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் நடிப்பிற்கான இலக்கணம். அவரின் மகன்கள் பிரபு, ராம்குமாரை அடுத்து தேவ், விக்ரம் பிரபு இருவரும் சினிமாவில் கதாநாயகனாக நடித்தனர். இதில் விக்ரம் பிரபு வெற்றி தோல்வியை கடந்து நல்ல கதையை கேட்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராம்குமாரின் இளைய மகன் தர்ஷன் தற்போது முதல்முறையாக கதாநாயகனாக புதிய படத்தில் நடித்துள்ளார்.dharshan

சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை புதுமுக இயக்குனர் பாலா என்பவர் இயக்கியுள்ளார். இதில் ரோஜா, கங்கை அமரன், ஸ்ரிதா ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.


  

Share this story