நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டிய ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம்...!

SK

அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனாக நடித்து பெயர் பெற்ற சிவகார்த்திகேயனை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் பாராட்டியுள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான  அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாய்பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருவருமே படத்தில் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தனர். இவர்களின் நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்த நிலையில் படத்தினை தற்போது வரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையம் சிவகார்த்திகேயனை பெருமையுடன் பாராட்டியுள்ளது.



அதிலும் மேஜர் முகுந்த் வரதராஜனை OTA- வின் புகழ்பெற்ற முன்னாள் மாணவராக சித்தரிக்கும் சிவகார்த்திகேயனின் அற்புதமான நடிப்பிற்காக இந்த பாராட்டு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அமரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.  இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share this story