ஃபென்ஜால் புயல் நிவாரணம் : நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் உதவி

sk

ஃபென்ஜால் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "ஃபென்ஜால் புயல் - கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.



ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. வெள்ள பாதிப்புக்குள்ளான இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், துணை மின் நிலையங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்தன. இதன்மூலம், ரூ. 3,000 கோடி முதல் ரூ. 5,000 கோடி வரை மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this story