நண்பர்களுடன் ஜாலி மோடில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அஜித் பட பாடல் பாடிய வீடியோ வைரல்...!

sk

நடிகர் சிவகார்த்திகேயன் நண்பர்களுடன் அஜித்தின் ஓ சோனா.. பாடல் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர்   
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என ஒரு ஆல்ரவுண்டராக வலம் வருகின்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மிகப் ஆனது. தற்போது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்த ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராஸி என்ற திரைப்படத்திலும் நடித்துக்கொண்டு உள்ளார். இதில் முதலில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராஸி என்ற திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.  

இந்நிலையில் படப்பிடிப்பில் செம பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன் நண்பர்களுடன் இணைந்து அஜித்தின் வாலி படத்தில் இடம்பெற்ற ஓ சோனா என்ற பாடலை பாடி வைப் செய்துகொண்டு இருக்கின்றார் சிவகார்த்திகேயன். அந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Share this story