இலங்கையில் ரசிகர்களின் அன்பு மழையில் நடிகர் சிவகார்த்திகேயன்... வீடியோ வைரல்

இலங்கையில் நடிகர் சிவகார்த்திகேயனை காண ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி வரும் பராசக்தி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கினறனர். மேலும் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்றது. அடுத்த கட்டமாக இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
"Sivakarthikeyan spreading joy with his lovely girl fans in Sri Lanka! 🌟 Wishing him all the success and happiness for #Parasakthi! 🎉💖 #Sivakarthikeyan #Sreeleela #SudhaKongara #Atharvaa #RaviMohan 🇱🇰✨" pic.twitter.com/xQ4bbw6Ru7
— TamilCineX (@TamilCineX) March 14, 2025
படப்பிடிப்பின்போது சிவகார்த்திகேயனை காண ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். அங்கு கூடி இருந்த ரசிகர்களை நோக்கி சிவகார்த்திகேயன் கை அசைத்தார். மேலும், சிவகார்த்திகேயன் செல்லும் காரை சூழ்ந்த ரசிகர்கள் அவருக்கு அன்பு மழையை பொழிந்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
"Crowds go wild 🔥 as Sivakarthikeyan gets mobbed by his crazy fans in Sri Lanka! 🎉 Here’s to more milestones 🏆 and unstoppable energy, SK! 💪 #Sivakarthikeyan #SriLankaFever #BestWishes ✨" pic.twitter.com/OVQFzWVR8X
— TamilCineX (@TamilCineX) March 14, 2025