‘நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை சந்தித்தேன்’.. நெகிழும் சிவகார்த்திகேயன் !

ajith with sivakarthikeyan

நீண்ட நாள் கழித்து நடிகர் அஜித்தை சந்தித்த புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் தனி முத்திரை படைத்துள்ளார். இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான கதாநாயகனாக சிவகார்த்திகேயன் உள்ளார். 

ajith with sivakarthikeyan

சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் முன்னணி படங்களுக்கு சமமான வசூல் சாதனை படைத்து வருகிறது. அசுர வளர்ச்சியை எட்டியுள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான், பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படங்களை அடுத்து அயலான், ‘மாவீரன்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.  

இந்நிலையில் தல அஜித்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சாரை சந்தித்தேன். உங்களுடனான சந்திப்பு வாழ்நாள் முழுக்க கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உங்கள் நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். 


 

Share this story