‘பிரின்ஸ்’ படத்தால் ஏற்பட்ட மரண அடி.. சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன் !

‘பிரின்ஸ்’ படத்தின் தோல்வியால் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கடைசியாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் ஜாலியான காமெடி படமாக உருவாகி வெளியானது. ஆனால் இந்த படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
இந்த படத்திற்கு மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பிசியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ‘மாவீரன்’ படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 25 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். ‘பிரின்ஸ்’ படத்திற்காக 30 கோடி சம்பளம் பெற்ற இந்த படத்திற்கு அதை குறைவாக சம்பளம் பெற்றுள்ளார். இதற்கு காரணம் ‘பிரின்ஸ்’ படத்தின் படுதோல்வியே என கூறப்படுகிறது. பொதுவாக ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் படத்தின் தோல்விக்கு பிறகு சம்பளத்தை குறைப்பார்கள். அதே பாணியை தான் சிவகார்த்திகேயனும் கையாளுவதாக கூறுகின்றனர். அதேநேரம் ‘மாவீரன்’ படம் வெற்றிப் பெற்றுவிட்டால் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.