‘ஸ்வீட் ஹார்ட்’ படக்குழுவை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்...

ஸ்வீட் ஹார்ட் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் ரியோ ராஜ். அந்த வகையில் இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜோ திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்
#Sivakarthikeyan Watched #Sweetheart and Appreciated the Entire Cast & Crew 🤝
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) March 15, 2025
pic.twitter.com/FUIR5IlAHO
அந்த வகையில் தற்போது யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் ஸ்வீட் ஹார்ட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ். குமார் இயக்க யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 14ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தயாரிப்பாளர் யுவன் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்துள்ளார். அதன் பின் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.