மகனுக்கு பிறந்தநாள்... அழகிய குடும்பத்தின் புகைப்படங்களை வெளியிட்ட சிவகார்த்திகேயன் !

sivakarthikeyan

மகன் பிறந்தநாளையொட்டி தனது அழகிய குடும்ப புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். 

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது முன்னணி சினிமா நடிகராக இருக்கும் அவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளார். சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் ரசிகர்களின் ஆதரவால் மிக உயரத்திற்கு சென்றுள்ளார்.  ‌ 

sivakarthikeyan

கடந்த 2010-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் உள்ளனர்.  இந்நிலையில் சிவகார்த்திகேயன் மகன் குகன் தாஸுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

sivakarthikeyan

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாவீரன்' நாளை மறுநாள் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story