'ஜெயிலர்' சூப்பர் ஹிட்டடிக்கும் - வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன் !

sivakarthikeyan

'ஜெயிலர்' திரைப்படம் சூப்பர் ஹிட்டடிக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.  'எஸ்கே 21' என்று அழைக்கப்படும் இந்த படத்தை  ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார். 

 jailer

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'மாவீரன்' திரைப்படம் 25 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

jailer

'மாவீரன்' திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் என்னை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். 'ஜெயிலர்' படத்தில் பிசியாக இருந்த நடிகர் ரஜினிகாந்த் எனக்காக நேரம் ஒதுக்கி படத்தை பார்த்து என்னையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு முறையும் என்னுடைய படத்தை பார்த்து பாராட்டும் போது அது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கிறது. 

உங்கள் சரித்திரத்தில் இன்னும் முக்கியமான நாளாக நாளை இருக்கப்போகிறது. 'ஜெயிலர்' திரைப்படம் வெற்றியடைய வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்குகிறோம். நிச்சயம் 'ஜெயிலர்' திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 


 

Share this story