சிவகார்த்திகேயன் சொன்ன ஷாக்கிங் நியூஸ்.. ரசிகர்கள் அதிர்ச்சி !

sk

ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளப்போவதாக நடிகர் சிவகார்த்திகேயன் சொன்னது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். அவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sk 21

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் என் அன்பு சகோதர, சகோதரிகளே, ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்து வருகிறேன்.  விரைவில் ட்விட்டர் பக்கத்திற்கு திரும்புவேன். கவனமாக இருங்கள். எனது திரைப்படங்களின் அப்டேட்டுகள் படக்குழுவினரால் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். 

sk 21

இதற்கிடையே 'ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிப்பதற்காக தான் ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிவகார்த்திகேயன் தற்காலிகமாக விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story