ஐஸ்வர்யா ராஜேஷை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவகுமார்.. ‘ஃபர்ஹானா’ படக்குழுவினருக்கு வாழ்த்து !

Farhana

நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ‘ஃபர்ஹானா’ படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் சிவகுமார் பாராட்டியுள்ளார். 

பெண்களை முன்னிறுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’.  இந்த படத்தை இயக்குனர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Farhana

இஸ்லாமியா பெண்கள் படும் இன்னல்கள் குறித்தும், அவர்களது உரிமைகள் குறித்தும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு திரையரங்கில் மட்டும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டது. 

Farhana

இது படத்திற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சமீபத்தில் ஃபர்ஹானா படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளிட்டுள்ள ட்விட்டர் பதிவில், படத்தை பற்றி நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறேன். அனைவராலும் விரும்பும் படமாக ஃபர்ஹனா மாறட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ‘ஃபர்ஹானா’ படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் சிவகுமார் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘ஃபர்ஹானா’ படத்தை பாராட்டியதற்கு நன்றி. இது எங்கள் படக்குழுவினருக்கு உத்வேகத்தை தருகிறது. உங்கள் அனுபவத்திலிருந்து பல நேர்மறையான விஷயங்களை கூறியதற்கு நன்றி. இது உண்மையிலேயே ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என்று நடிகர் சிவகுமாருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார். 


 

Share this story