துப்பாக்கியால் சுட்டு எஸ்ஜே சூர்யா பிறந்தநாளை கொண்டாடிய விஷால்... ஆரவாரம் செய்த 'மார்க் ஆண்டனி' படக்குழு !

எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளையொட்டி 'மார்க் ஆண்டனி' படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
'வாலி', 'குஷி' உள்ளிட்ட படங்கள் முலம் சிறந்த இயக்குனராக தமிழ் சினிமாவில் வெற்றி கண்டவர் எஸ்ஜே சூர்யா. தற்போது சிறந்த நடிகராக குறிப்பாக வில்லனாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். ஸ்பைடர், மெர்சல், மாநாடு ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டியிருந்தார். அதேநேரம் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வரும் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.
இந்நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி 'மார்க் ஆண்டி' பட குழுவினரோடு இணைந்து அவர் பிறந்தநாள் கொண்டாடினார். இந்த நிகழ்வில் விஷால் உள்ளிட்ட கலந்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
#MarkAntony - 'Nadippu Arakkan' #SJSuryah Birthday Celebration on the sets..🔥#HBDSJSuryahpic.twitter.com/B0bNjSSb6B
— Laxmi Kanth (@iammoviebuff007) July 20, 2023