சந்தோஷ் நாராயணனுக்கு டச்-அப் செய்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா
'ஜிகர்தண்டா டபுள் X' படப்பிடிப்பு தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா மேக்கப் போட்ட காணொலி வைரலாகி வருகிறது.
சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’ இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது. தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் தற்போது தயாராகியுள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்குகிறார். மேலும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
#SjSurya & #SanthoshNarayanan 😀#JigarthandaDoubleX pic.twitter.com/gYdG8q3EWt
— Cine Buzzler📽️ (@TweeeterGalaxXy) October 13, 2023
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சந்தோஷ் நாராயணனுக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா மேக்கப் போட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.