விபத்தில் சிக்கி நடிகர் சோனு சூட் மனைவி காயம்...!

soonu sood

சினிமா நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். 


திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் சோனு சூட். இவரது மனைவி சோனாலி சூட் மற்றும் தங்கை சென்ற கார் விபத்தில் சிக்கியது. மும்பை - நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.  சோனாலி சூட் பயணித்த கார், சாலையில் எதிர்புறம் வந்த டிரக் மீது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. சோனாலி சூட் உடன் அவரது சகோதரி மற்றும் ஒரு உறவினர் ஓருவரும் காரில் இருந்துள்ளார். விபத்தில் சோனாலி சூட் மற்றும் அவரது சகோதரி படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.soonu sood

தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சோனாலி சூட் மற்றும் அவரது சகோதரியின் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் பலத்த காயங்கள் காரணமாக அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடலில் உள் காயங்கள் எதுவும் இல்லை. விபத்தில் சிக்கிய சோனாலி சூட் உறவினர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


இந்நிலையில், விபத்து குறித்து நடிகர் சோனு சூட் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரார்த்தணைகளுக்கு சக்தி அதிகம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்ந்தேன். அனைத்து பிரார்த்தனைகளுக்கும் இதயப்பூர்வமான செய்திகளுக்கும் மிக்க நன்றி. சோனாலி மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் நலமுடன் உள்ளனர். உங்களின் அன்புக்கும் கருணைக்கும் என்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 
சோனு சூட் & குடும்பம்
 

Share this story