பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட அஜித்குமாருக்கு நடிகர் சூரி வாழ்த்து..

soori

நடிகர் சூரி பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.


இந்தநிலையில், 2025-ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், "பத்ம பூஷன் விருது பெறும் அன்பிற்குரிய அஜித் சார் அவர்களுக்கு என் நெங்சார்த்த வாழ்த்துகள். மேலும் ஷோபனா மேடம் அவர்களுக்கும், ஐயா நல்லி குப்புசாமி அவர்களுக்கும் வாழ்த்துகள். பத்ம ஶ்ரீ விருது பெறும் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் பிரதர் அவர்களுக்கும், சமையல் கலை நிபுணர் தாமோதரன் சார் அவர்களுக்கும் பத்ம விருதுகள் பெறும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Share this story