"இசை-யை சந்தித்து நன்றி கூறினேன்" - நடிகர் சூரி நெகிழ்ச்சி !

viduthalai

'விடுதலை' படத்தின் வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து நடிகர் சூரி வாழ்த்து பெற்றார். 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் சூரி. பரோட்டா காமெடி மூலம் பிரபலமான அவர், முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகனாக நடித்து வருகிறார். இதையடுத்து அவரின் அடுத்த பரிணாமமாக 'விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடித்தது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

viduthalai

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 'விடுதலை' போலீசாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே அசத்தியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.  கடந்த சில முன்பு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சூரியின் நடிப்பிற்கும் பாராட்டு குவிந்து வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை அடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து நடிகர் சூரி வாழ்த்து பெற்றார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌"இசை"யை‌ சந்தித்து நன்றி கூறினேன்..ஆசி வாங்கினேன்.. இறைவனுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். 


 

Share this story