‘விடுதலை’-யை தொடர்ந்து புதிய படத்தில் ஹீரோவாகும் சூரி...

‘விடுதலை’ படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் சூரி. பரோட்டா காமெடி மூலம் பிரபலமான அவர், முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ கதாநாயகனாக நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இருபாகங்களாக உருவாகும் இந்த படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் வரும் மார்ச் மாதம் இப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தை முடித்த சூரி தனது ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சூரி மீண்டும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கவுள்ளார். ‘கூழாங்கல்’ உலக அளவில் கவனம் ஈர்த்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.