ஆளே மாறிப்போன சூரி.. மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் !
நடிகர் சூரி மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். அந்த வகையில் சந்தானத்தை பின் தொடர்ந்து தற்போது ஹீரோவாக மாறியுள்ளவர் சூரி. பரோட்டா காமெடி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அவர், முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்தார்.

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் காமெடியனாக இருந்த சூரியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு ‘விடுதலை 2’ படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து புதிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூரி வெளியிட்டுள்ள மாஸ் லுக் புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் புதிய ஹேர் ஸ்டைலுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடி மாஸாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

